#MEMEthokai82
Situation: Thalaivan (hero) is in love with Thalaivi (Heroine). He was away from her to earn wealth for marriage or afraid of gossips. He has made up his mind and come to Thalaivi’s village to ask her hand in marriage. Thozhi (Thalaivi’s friend) informs her about his arrival. #MEMEthokai #karkanirka
குறுந்தொகை 83, வெண்பூதனார், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை,
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
தீம் பழம் தூங்கும் பலவின்
ஓங்கு மலை நாடனை, வரும் என்றோளே.
kuṟuntokai 83, veṇpūtaṉār, kuṟiñcit tiṇai – tōḻi cevilittāyai vāḻtti talaivikku uṇarttiyatu
arum peṟal amiḻtam ārpatam ākap
perum peyar ulakam peṟīiyarō aṉṉai,
tam il tamatu uṇṭaṉṉa ciṉaitoṟum
tīm paḻam tūṅkum palaviṉ
ōṅku malai nāṭaṉai, varum eṉṟōḷē.


குறுந்தொகை 83, வெண்பூதனார், குறிஞ்சித் திணை – தோழி செவிலித்தாயை வாழ்த்தி தலைவிக்கு உணர்த்தியது
அரிதாகக் கிடைப்பெரும் அமிழ்தமே உணவாக,
பெரும் புகழையுடைய உலகத்தைப் பெறுவாளாக, அன்னை!
தமது வீட்டில் தன் உழைப்பில் உண்டுவன் போல், கிளைகள்தோறும்
இனிமையான பழங்கள் தொங்கும் பலாமரங்கள் கொண்ட
உயர்ந்த மலை நாட்டை சேர்ந்தவன் [திருமணம் பேச] வருகிறான் என்று சொன்னளே!
Kurunthokai 83, Vennpoothanār, Kurinji Thinai – What the heroine’s friend said, when she praised the foster mother
Let the difficult to attain nectar become her food!
Let our mother get famed wide world
For saying that he,
who eats through his own efforts
in his own house
in the lofty mountains where
Sweet jackfruits hang in every branch
Is coming [to ask your hand]”
Translated by Palaniappan Vairam Sarathy
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—–
அரும் பெறல் அமிழ்தம் ஆர்பதம் ஆகப்
arum peṟal amiḻtam ārpatam ākap
அரிதாகக் கிடைப்பெரும் அமிழ்தமே உணவாக,
Difficult to obtain – nectar – food – become
பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை,
perum peyar ulakam peṟīiyarō aṉṉai,
பெரும் புகழையுடைய உலகத்தைப் பெறுவாளாக, அன்னை!
Big – fame – world – you get – mother
தம் இல் தமது உண்டன்ன சினைதொறும்
tam il tamatu uṇṭaṉṉa ciṉaitoṟum
தமது வீட்டில் தன் உழைப்பில் உண்டுவன் போல், கிளைகள்தோறும்
His – house – his own -eat – every branch
தீம் பழம் தூங்கும் பலவின்
tīm paḻam tūṅkum palaviṉ
இனிமையான பழங்கள் தொங்கும் பலாமரங்கள் கொண்ட
Sweet- fruit – hanging – jackfruit
ஓங்கு மலை நாடனை, வரும் என்றோளே.
ōṅku malai nāṭaṉai, varum eṉṟōḷē.
உயர்ந்த மலை நாட்டை சேர்ந்தவன் [திருமணம் பேச] வருகிறான் என்று சொன்னளே!
Lofty – mountain – countryman, – come -she said