He didn’t proceed to his second marriage -Akananooru 66


#MEMEthokai83

Situation: Thalaivan (hero) who is married to Thalaivi (heroine) and has a son.He is having affairs outside marriage and intending to marry his sweetheart. Thalaivi utters this poem. #MEMEthokai #karkanirka

அகநானூறு 66, செல்லூர் கோசிகன் கண்ணனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
மறுமை உலகமும் மறு இன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்  5
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி,
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்
இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்
மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து,  10
காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர்
தாங்குமதி வலவ” என்று இழிந்தனன், தாங்காது
மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்
புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக்  15
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த
மாநிதிக்கிழவனும் போன்ம் என, மகனொடு
தானே புகுதந்தோனே, யான் அது
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்
கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று  
அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு
இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்
பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்,
kaḻaṅku āṭu āyattu aṉṟu nam aruḷiya
பழம் கண்ணோட்டமும் நலிய,  25
அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.

akanāṉūṟu 66, cellūr kōcikaṉ kaṇṇaṉār, marutat tiṇai – talaivi tōḻiyiṭam coṉṉatu
‘immai ulakattu icaiyoṭum viḷaṅki
maṟumai ulakamum maṟu iṉṟu eytupa,
ceṟunarum viḻaiyum ceyirtīr kāṭcic
ciṟuvarp payanta cemmalōr’ eṉap
pallōr kūṟiya paḻamoḻi ellām  5
vāyē ākutal vāyttaṉam tōḻi,
nirai tār mārpaṉ nerunal oruttiyoṭu
vatuvai ayartal vēṇṭip, putuvatiṉ
iyaṉṟa aṇiyaṉ itteru iṟappōṉ
māṇ toḻil mā maṇi kaṟaṅkak kaṭai kaḻintu,  10
kāṇṭal viruppoṭu taḷarpu taḷarpu ōṭum
pūṅkaṇ putalvaṉai nōkki, “neṭuntēr
tāṅkumati valava” eṉṟu iḻintaṉaṉ, tāṅkātu
maṇi purai cevvāy mārpakam civaṇap
pullip “peruma! cel iṉi akattu” eṉak  15
koṭuppōṟku ollāṉ kaluḻtaliṉ taṭutta
mānitikkiḻavaṉum pōṉm eṉa, makaṉoṭu
tāṉē pukutantōṉē, yāṉ atu
paṭuttaṉeṉ ākutal nāṇi iṭittu ivaṉ
kalakkiṉaṉ pōlum ikkoṭiyōṉ eṉacceṉṟu  
alaikkum kōloṭu kuṟukat, talaikkoṇṭu
imiḻ kaṇ muḻaviṉ iṉ cīr avar maṉaip
payirvaṉa pōla vantu icaippavum tavirāṉ,
kaḻaṅku āṭu āyattu aṉṟu nam aruḷiya
paḻam kaṇṇōṭṭamum naliya,  25
aḻuṅkiṉaṉ allaṉō ayarnta taṉ maṇaṉē.

அகநானூறு 66, செல்லூர் கோசிகன் கண்ணனார், மருதத் திணை – தலைவி தோழியிடம் சொன்னது
இப்பிறவியில் உலகத்தில் புகழோடும் விளங்கி
மறுபிறவி உலகையும் குற்றமின்றி எய்துவர்,
பகைவரும் விரும்பும் குற்றமற்ற தன்மையுடைய
குழந்தையைப் பெற்ற பெருமைக்குரியர் என்று
பலரும் கூறுகின்ற பழமொழி எல்லாம்
உண்மையாக வாய்த்ததே தோழியே!
வரிசையாக மாலைகளைப் அணிந்த மார்பன் நேற்று ஒருத்தியோடு
மணம் செய்துகொள்ள வேண்டி புதிதாகச்
தன்னை அலங்கரித்து, இத்தெருவழியே செல்பவன்
சிறந்த வேலைப்பாடுக் கோண்டக் குதிரையின் மணி ஒலிக்க, வாசலைக்கடந்து சென்று
காண விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த
பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனை நோக்கி,” நெடுந் தேரினை
நிறுத்து தேரோட்டி!” என்று கூறித் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதிக்காமல்
பவளம் போன்ற மகனின் சிவந்த வாய் தன் மார்பினில் அழுத்தி
மார்போடு அணைத்து, ‘தலைவனே! நீ இனி வீட்டுக்குள் போ’ என்று
பெற்றேடுத்தவனுக்கு உடன்படாமல் அழுவதை தடுத்த
பெரும் நிதி கிழவன் (குபேரன்) போன்றவன் என கூறும்வண்ணம் மகனோடு
தானே இல்லத்திற் புகுந்தானே; நான் அவர் வருவதை
நான் திட்டமிட்டேன் என்று அவன் எண்ணுவான் என்று வெட்கப்பட்டு, முழங்கி இவன்
குழப்பம்செய்வான் போலும் இந்தக் கொடியவன் என்று கூறிச்சென்று
அடிக்கின்ற குச்சியோடு அவனருகில் செல்ல, அவன் தலை அனைத்துக்கொண்டு ,
ஒலிக்கும் முழவின் கண்ணின் இனிய ஓசை, மணம் நடக்கும் அவள் வீட்டிலிருந்து
அழைப்பது போல வந்த இசைக் கேட்டும், இங்கிருந்து நீங்காமல்
கழங்கு விளையாடிய காலத்தில் நம் தோழியரிடையே வந்தருளிய
பழைய நினைவுகள் தன்னை வருத்த
தவிர்த்தான் அல்லவா தன் திருமணத்தை!

Akanānūru 66, Selloor Kōsikan Kannanār, Marutham Thinai – What the heroine said to her friend about her unfaithful husband
Many of them narrate proverbs which say
“Not only your life would be illustrious in this birth even in your next birth, you would obtain fame,
desired even by your enemies, if you have yielded Excellent children without any defect”
These words certainly came true my friend!

My man, who wore new clothes adorned with garland on his chest,
passed this street to perform Vathuvai (marriage ceremony with his other woman),
hearing the sound of the big bells (of the chariot) at the entrance,
Desiring to see his father, my son ran tenderly to the street!
Looking at his son with flower eyes,
he said “chariotter, please stop the tall chariot!” and got down without delay!
He embraced the coral like red chest of his son
And said “Great man! Go to your house now!”

His son wouldn’t agree and cried, to stop his crying,
He entered my house like lord of wealth on his own accord.
Ashamed of the happenings, I rebuked him saying
“ you cruel one, you have interrupted your father’s work!”
And moved toward him with waving the cane,
He embraced my son and did not leave
even when the Mulavu sounded like the invitation call to her house!

I felt like old days When I played games with my friends,
where he showered his love, He even forgot
to drive to union with his other women!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

The poem probably atleast 1800 years old has reference to proverbs or old saying.

இசை icai 1. Sound, noise; ஓசை. 2). 2. Word; சொல். 3. Praise, fame, renown, opp. to வசை; புகழ். 4. Song, music; இசைப்பாட்டு.
நிரை-த்தல் nirai–. 1. To arrange in order, classify; ஒழுங் காய் நிறுத்துதல். 2. To crowd, cluster; நிரப்புதல். 4. To string together; கோத்தல்.
நெருநல் nerunal – Yesterday; நேற்று.
வதுவை vatuvai [K. maduve, Tu. madume.] 1. Bride; மண மகள். 2. Wedding, marriage; விவாகம். 3. Wedding garland; மணமாலை. 4. Fragrance; வாசனை. 5. Sexual union; புணர்ச்சி.
வலவன்² valavaṉ , n. < vallabha. 1. Charioteer; தேர்ப்பாகன்.
கழங்கு kaḻaṅku , n. perh. கழல். 1. Molucca-bean; கழற்சிக்காய். 2. Play among girls with Molucca-beans; கழற்சி விளையாட்டு.

மாநிதிக்கிழவன் mānitikkiḻavaṉ- Lord with great wealth -> God of Money -> equivalent of Kuberan? This is highly likely influence of Indus valley which is trade based society. A society which valued wealth. So highly likely there was a god for Wealth and counter movement against wealth [Proto Jainism – Buddhism]. In Sangam age we have a male god of wealth. Kuberan derivative of same Proto god was famous in North India. Eventually this god has been replace by female version of Lakshmi.


Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

The four hundred songs of love anthology of poems from classical Tamil, the Akananuru, tr. and annotated by George L. Hart


இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

‘immai ulakattu icaiyoṭum viḷaṅki

இப்பிறவியில் உலகத்தில் புகழோடும் விளங்கி

This life – world – acquire – illustrious 

மறுமை உலகமும் மறு இன்று எய்துப,

maṟumai ulakamum maṟu iṉṟu eytupa,

மறுபிறவி உலகையும் குற்றமின்றி எய்துவர்,

Next life/birth – world – fault/blemish – without – obtain

செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

ceṟunarum viḻaiyum ceyirtīr kāṭcic

பகைவரும் விரும்பும் குற்றமற்ற தன்மையுடைய

Enemies – desire – fault less – sight

சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ எனப்

ciṟuvarp payanta cemmalōr’ eṉap

குழந்தையைப் பெற்ற பெருமைக்குரியர் என்று

Child – who yielded –  great /excellent – thus

பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்  5

pallōr kūṟiya paḻamoḻi ellām  5

பலரும் கூறுகின்ற பழமொழி எல்லாம்

Many – say – proverb – all

வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி,

vāyē ākutal vāyttaṉam tōḻi,

உண்மையாக வாய்த்ததே தோழியே! 

succeed- became – true/certainty – friend

நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு

nirai tār mārpaṉ nerunal oruttiyoṭu

வரிசையாக மாலைகளைப் அணிந்த மார்பன் நேற்று ஒருத்தியோடு

crowded/row – garland – chest man – yesterday – with one girl

வதுவை அயர்தல் வேண்டிப், புதுவதின்

vatuvai ayartal vēṇṭip, putuvatiṉ

மணம் செய்துகொள்ள வேண்டி புதிதாகச்

Vathuvai ceremony/sex – perform – for the sake – new

இயன்ற அணியன் இத்தெரு இறப்போன்

iyaṉṟa aṇiyaṉ itteru iṟappōṉ

தன்னை அலங்கரித்து, இத்தெருவழியே செல்பவன்

Nature  – adorn  – this street – pass 

மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து,  10

māṇ toḻil mā maṇi kaṟaṅkak kaṭai kaḻintu,  10

சிறந்த வேலைப்பாடுக் கோண்டக் குதிரையின் மணி ஒலிக்க, வாசலைக்கடந்து சென்று

Excellent – occupation/action – big/horse – bell – sound – entrance / doorway-pass

காண்டல் விருப்பொடு தளர்பு தளர்பு ஓடும்

kāṇṭal viruppoṭu taḷarpu taḷarpu ōṭum

காண விருப்பத்துடன் தளர்ந்து தளர்ந்து ஓடிவந்த

See – desire – tender/weak – tender /sloppy – run

பூங்கண் புதல்வனை நோக்கி, “நெடுந்தேர்

pūṅkaṇ putalvaṉai nōkki, “neṭuntēr

பூப்போன்ற கண்களையுடைய தன் புதல்வனை நோக்கி,” நெடுந் தேரினை

Flower – eyes – son – see – tall – chariot

தாங்குமதி வலவ” என்று இழிந்தனன், தாங்காது

tāṅkumati valava” eṉṟu iḻintaṉaṉ, tāṅkātu

நிறுத்து தேரோட்டி!” என்று கூறித் தேரை விட்டு இறங்கியவன், சற்றும் தாமதிக்காமல்

Stop – charioteer – thus – dismount – without delay

மணி புரை செவ்வாய் மார்பகம் சிவணப்

maṇi purai cevvāy mārpakam civaṇap

பவளம் போன்ற மகனின் சிவந்த வாய் தன் மார்பினில் அழுத்தி

Gem – resemble – red mouth (coral?) – chest – approach

புல்லிப் “பெரும! செல் இனி அகத்து” எனக்  15

pullip “peruma! cel iṉi akattu” eṉak  15

மார்போடு அணைத்து, ‘தலைவனே! நீ இனி வீட்டுக்குள் போ’ என்று

Embrace – great man – go – now – house’ 

கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த

koṭuppōṟku ollāṉ kaluḻtaliṉ taṭutta

பெற்றேடுத்தவனுக்கு  உடன்படாமல் அழுவதை தடுத்த 

One who gives – Agree – cry – stop 

மாநிதிக்கிழவனும் போன்ம் என, மகனொடு

mānitikkiḻavaṉum pōṉm eṉa, makaṉoṭu

பெரும் நிதி கிழவன் (குபேரன்) போன்றவன் என கூறும்வண்ணம்  மகனோடு

Great money lord (Kuberan) – similar – thus – with son

தானே புகுதந்தோனே, யான் அது

tāṉē pukutantōṉē, yāṉ atu

தானே இல்லத்திற் புகுந்தானே;  நான் அவர் வருவதை

On his own – entered – me – that

படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன்

paṭuttaṉeṉ ākutal nāṇi iṭittu ivaṉ

நான் திட்டமிட்டேன் என்று அவன்  எண்ணுவான் என்று  வெட்கப்பட்டு, முழங்கி  இவன்

To cause/put pressure – become – sense of shame – rebuke – he

கலக்கினன் போலும் இக்கொடியோன் எனச்சென்று  

kalakkiṉaṉ pōlum ikkoṭiyōṉ eṉacceṉṟu  

குழப்பம்செய்வான் போலும் இந்தக் கொடியவன் என்று கூறிச்சென்று 

Confuse – looks like – cruel one – saying so and went

அலைக்கும் கோலொடு குறுகத், தலைக்கொண்டு

alaikkum kōloṭu kuṟukat, talaikkoṇṭu

அடிக்கின்ற குச்சியோடு அவனருகில் செல்ல, அவன் தலை அனைத்துக்கொண்டு  ,

Waving/beat – rod – going near – undertake

இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப்

imiḻ kaṇ muḻaviṉ iṉ cīr avar maṉaip

ஒலிக்கும் முழவின் கண்ணின்  இனிய ஓசை, மணம் நடக்கும் அவள் வீட்டிலிருந்து

Sound – center of drum – drum – sweet – sound/music – her – house

பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான்,

payirvaṉa pōla vantu icaippavum tavirāṉ,

அழைப்பது போல வந்த இசைக் கேட்டும், இங்கிருந்து நீங்காமல்

கழங்கு விளையாடிய காலத்தில்  நம் தோழியரிடையே வந்தருளிய!

Call – alike – come – indicate – abstain

கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய

kaḻaṅku āṭu āyattu aṉṟu nam aruḷiya

Molucca-beans – Play – female friends – those days – our – graceful

பழம் கண்ணோட்டமும் நலிய,  25

paḻam kaṇṇōṭṭamum naliya,  25

பழைய நினைவுகள் தன்னை வருத்த

Old – kindness/vision – perish/cause distress

அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே.

aḻuṅkiṉaṉ allaṉō ayarnta taṉ maṇaṉē.

தவிர்த்தான் அல்லவா தன் திருமணத்தை

Avoid – did he not- drive/forgot – his – union/marriage

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.