Tamils had beautiful skill of being heroic, yet poetic in their verses. This is one of the brilliant examples. Buildup comes natural to these poets!
——————————————————————————————————
Follow Karka Nirka Blog in
Facebook – http://www.facebook.com/pages/Karka-Nirka/353094691592
Twitter – https://twitter.com/KarkaNirka
——————————————————————————————————
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்,
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன்,
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
குடப் பால் சில் உறை போல,
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.
Lovable son
of the fine old women with,
Silvery white hair without perfume fragrance and
Dry breasts with wrinkled nipples like seeds of Iravam tree
became all the affliction which the (enemy) army experienced,
like small (drop of curd) curdle in the pot of milk
sprinkled by the sharp nail of the tender cowherd girl
Poet: Maturai Putan Ilanakanar
Translated: Palaniappan Vairam Sarathy
Explanation: It just takes a drop of buttermilk to turn a whole pot of milk into curd similarly, it just took one man to rout the whole army!
சிறு துளி உறை ஒரு பானை பாலைத் தயிராக மாற்றுவது போல்,
தனி ஒருவன் இவன் ஒரு படை அனைத்திற்கும் நோயாக மாறினான்
The poet says that the old women nipples were wrinkled liked the Ceylon iron wood tree’s seed.
Beautiful translation more accurate to the flow of the Tamil poem by Dr.Hart below.
Her white hair unscented,
the nipples of her empty breasts wrinkled like iravam seeds,
she is the loving mother of a boy
who,like the few drops of curd an innocent cowherd girl
flicks with her strong nail into a pot of milk,
all alone spread suffering through a whole army.
Poet: Maturai Putan Ilanakanar
Translated by Gorge L. Hart
நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்,
Perfume – odour – neglect/give up – grey – white – hair
இரங் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை,
Ironwood – seed – alike – wrinkled – nipples – dry breast
செம் முது பெண்டின் காதலம் சிறாஅன்,
Fine – old – women – love – child-male
மடப் பால் ஆய்மகள் வள் உகிர்த் தெறித்த
tender – quality– ayar girl – sharp – finger nail – sprinkled
குடப் பால் சில் உறை போல,
Pot- milk – small – curdle – alike
படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே.
Army – disease/affliction/pain – all – he – became
தமிழ் தட்டச்சு பிழைகளுக்கு மனிக்கவும்.. பிழைகள் நீக்கிய பத்தியை மீண்டும் பதித்து உள்ளேன். நன்றி..
அன்பு நண்பருக்கு,
இக் கவிதையில் தயிர் என்பதும் பொருந்தி வரும் என்றே தோன்றுகிறது. காரணம் எங்கள் ஊர் பக்கம் (ஈரோடு, ஊத்துக்குளி பக்கம்) பாலில் தயிர் ஊற்றுவதே வழக்கமே அன்றி மோர் அல்ல.
உங்கள் பக்கங்களை சில நாட்களாக படித்து வருகிறேன். மிக நல்ல முயற்சி நன்றி..
ஒரு சில இடங்களில் இது போலவே எனக்கு கவிதை மொழிபெயர்த்த விதத்தில் அல்லது விளக்கம் அளிக்கும் விதத்தில் சற்று மாற்று கருத்து உள்ளது (உதாரணமாய் காமம், காதல் என்ற இரு நிலை சங்க பாடல்களில் குறிப்பிடபடுவதை தெரிவதில்லை. இரண்டுமே ஒரே பொருளில் கையாளப்படுகின்றன .. இது சங்க மரபாகவே நான் இது வரை உணர்ந்து உள்ளேன்.. ஆனால் நீங்கள் சில கவிதைகளில் இவ்விரு நிலைகளையும் தனித்தனியே குறிப்பிடுகிறீர்கள். இது கவிதைக்கு வேறு அர்த்தம் தருவதை போல் அமைந்து விடுகிறது)
சித்தர் பாடல்கள் ஆண்டார் பாடல்கள் என ஒரு பழம் சமூகத்தின் மகத்தான கவிதை மரபை இணையத்தில் ஏற்றுவதற்கு மிக்க நன்றி ..
சங்கத்தில் காதலும் காமமும் வேறு அர்த்தங்கள் கொண்டவை , இதை i உணர்த்த பல பாடல்கள் உள்ளது , காமம் என்பதை passion/desire என்று ஆங்கிலத்தில் மொழிபயர்த்துளனர் . களவு மற்றும் புணர்ச்சி என்ற இரு கோணத்தில் பார்த்தால் …. காதலில் இருக்கும் இருவர் காமம் கொண்டு புணருதல் குறுஞ்சி திணையின் மரபாகும்.
நன்றி நண்பரே.. மடப்பால் என்பது மோரை குறிப்பதாக இருக்கலாம். நான் அது குறித்து அதிகம் அறியேன்.. உறைக்கு மோர் இடுதல் என்பது நான் அதிகம் காணாத ஒரு பழக்கமாக எனக்கு பட்டதாலேயே அதை குறிப்பிட்டேன். நீங்கள் இது குறித்து ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வந்து இருப்பதை குறிப்பிட்டு இருப்பதால் மோர் என்பதே நிச்சயம் சரியானதாக இருக்கும். மன்னிக்கவும்
காதல் காமம் குறித்த உங்க எண்ணம் சற்று யோசிக்க வைப்பதாக உள்ளது. காதல் காமம் இரண்டையும் பிரிப்பதான வார்த்தைகள் சங்க இலக்கியத்தில் உள்ளதா? புணருதல் என்பது பல இடங்களில் குறிப்பிட்டு பட்டு இருந்தாலும் காமம் என்பது காதலின் அர்த்தத்தில் கையாளப்படுவதாகவே நான் இது வரை நினைத்து வந்துள்ளேன். passion love desire எல்லாமே ஒரு வகையில் நூலிலைகள் பின்னிய ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளாகவே பார்க்க பட்டதாக நான் உணர்ந்து உள்ளேன். (நான் சங்க இலக்கியங்களில் அதிக பரிச்சியம் அற்றவன்.. ஆனால் நான் படித்தது வரை இப்படி தான் நான் உணர்ந்து உள்ளேன்) .. அந்தந்த இடத்துக்கு (context) ஏற்றார் போல் love passion desire
இதில் ஏதேனும் ஒரு உணர்வு சற்று அதீதமாக வாசகனுக்கு தோன்ற கூடும். இதில் வாசகனின் மன நிலையும் முக்கிய பங்கு வகிக்கிறது.. இதனாலேயே காமம் என்று குறிப்பிடப்படும் உணர்வு மொழிபெயர்ப்பிலும் காமம் என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்று நான் விளைந்தேன். இதனால் கவிதைகள் பான் முகத்தன்மை பெறுகிறது..
சங்க கவிதையில் ஒரு கவிதை– நமது காமமானது ஊர்களை அழித்த காட்டாற்றை போல் இருந்து இப்போது அதே ஆறு வறண்டு போய் ஒரு சிறு குளம் போல் ஆகிவிட்டது என்பது போன்ற பொருள் பட அமைந்து இருக்கும் (எனக்கு ஞாபகம் இருந்த அளவு சொல்கிறேன்.. அந்த கவிதை இன்னும் அழகான ஒன்று.. அநேகமாய் உங்களுக்கு தெரிந்து இருக்கும்) இந்த கவிதை passion love desire என்று ஒவ்வொரு உணர்வுக்கும் நம் மனநிலைக்கு ஏற்றார் போல் அழகாக பொருந்தி வருவதை நம்மால் உணர முடியும்..
சொல்லளவில் கவிஞன் பிரிவு கொடுத்து இருந்தால் நிச்சயம் ஒரு இறுதி அர்த்தம் கொடுக்க முடியும். அவ்வாறு இல்லாத போது இதை ஒரு ஒரு உணர்வின் பல முகங்களை அர்த்தம் கொண்டு அதன் அடிப்படையில் வாசகனின் மனநிலைக்கு ஒத்து கவிதை அர்த்தம் பெற வேண்டும். புணர்ச்சி என்பதும் கலவி என்பதும் காமத்தின் வெளிப்பாடு. இதுவும் காமத்தில் உள்ள இருவர் காமத்தின் உச்சத்தில் புணர்தல் என்றே என்னால் பொருள் கொள்ள முடிகிறது.. மீண்டும் மீண்டும் யோசித்தால் கூட காமம் என்பது ஒரு ஆதி உணர்வின் பல கூறுகளை (காதல், வேட்கை, இச்சை, ஆசை, அன்பு போன்ற..) வெளிப்படுத்தும் ஒரு சொல்லாகவே எனக்கு படுகிறது .. இது கவிமனத்தை உச்சம் அடைய வைக்க சாத்தியமான கையாள்தல். எனது இந்த புரிதலில் தவறு இருந்தால் விளக்குவீர்கள் என நம்புகிறேன்.
நன்றி .