112.
கௌவை யஞ்சிற் காம மெய்க்கும்
எள்ளற விடினே யுள்ளது நாணே
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ
நாருடை யொசிய லற்றே
கண்டிசிற் றோழியவ ருண்டவென் னலனே.
ஆலத்தூர்கிழார்.
112. What she said
Look,friend,
fear of scandal will only thin out passion.
And if I should just give up my love
to end this dirty talk,
I will be left
only with my shame.
My virgin self of which he partook
is now like a branch half broken
by an elephant,
bent,not yet fallen to ground,
still attached to the mother tree
by fiber of its bark.
Poet:Alatturkirar
Translated by A.K.Ramanujan
Tamil Urai : U.V.Swaminathan Iyer
தோழி, பிறர் கூறும் பழி மொழியை அஞ்சினால்,
காமம் மெலிவடையும்; பிறர் இழித்தல் அறும்படி அக்காமத்தை விட்டு விடின்,
என்பால் இருப்பது நாண மட்டுமே ஆகும்;
தலைவர் நுகர்ந்த எனது பெண்மை நலம்,
பெரியகளிறு உண்ணும் பொருட்டு வளைக்க,வளைந்து,
நிலத்திற்படாத, பட்டையை உடைய ஒடிந்த கிளையைப் போன்றது:
இதனைக் காண்பாயாக.
The Talaivi(heroine) has given in to the love passion and has had sexual union with her lover. If she stops her visits with her lover , then she will be left only with her shame because she has lost her virginity to her lover. Now her status is like branch which has been given a huge blow by an elephant(which is compare to the huge blow in their love affair by the gossips) and is sticking on to the mother tree by fiber of its bark. By this she means that she can redeem her pride only by marrying the lover. Her hope that her lover wont desert her is comapred to the fibers of the bark which holds the bark to the tree. If the hope which is so tiny as the fiber attached to the tree fails, then she is like bark which had been broken form the tree meaning she has lost all her pride and would be put shame because she has lost virginty to some person .
From Ambalam.com – Sujatha’s simple Tamil version of the poem and illustration,
வதந்திகளுக்கு அஞ்சினால் ஆசை குறைந்து விடும்
முழவதும் அதை விட்டுவிட்டால் நாணம் மட்டும் மிஞ்சும்
யானை இழுத்து இன்னமும்
முழுவதும் முறியாமல்
தொத்திக் கொண்டிருக்கும் மரக்கிளை போன்றது
அவர் அனுபவித்த என் நிலைமை
அறிந்துகொள் தோழி
——————————————————————————–
Please post your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1
——————————————————————————–
மிகப் பிரமாதம்
அஞ்சி இருந்தால் எனது காதல் வெற்றி அடைந்திருக்காது
வைரம்,
பிற்காலத்தில் தமிழ் சமுதாயத்தில் புகுத்தப்பட்ட ‘பெண்ணடிமை’ கருத்துக்கள் , அகத்துறை பாடல்களில் இல்லை. திருக்குறள் இன்பத்துப்பால் பாடல்களிலும், அகநானூறு போன்ற தொகுப்புகளிலும் இயற்கையான காதல் அனுபவங்களில் இருந்து இளைஞர்களும், இல்லறத்தினரும் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம்.
உதாரணமாக புலவி நுணுக்கம் ( The intrinsic details of lovers quarrels), ஊடல் உவகை(The Joy of falling out – ‘Got Dumped’ ! ) காதல் வாழ்க்கையை சுவையூட்டுவன. காதலர்களை மேலும் பிணைப்பது.