Moss and the Touch – Kurunthokai 399


Probably one of the greatest visual imagery in Tamil literature. Any body who wants to understand the greatness of Sangam Tamil poets need to read the poem and see my visual representation. Nothing more to say from my end the picture would say the rest!

——————————————————————————————————
Follow Karka Nirka Blog in

Facebook – http://www.facebook.com/pages/Karka-Nirka/353094691592

Twitter – https://twitter.com/KarkaNirka

——————————————————————————————————

399. மருதம்
ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க
பாசி அற்றே பசலை-காதலர்
தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

வரைவு நீட்டித்த இடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. – பரணர்

 

In the village tank while drawing water from the banks,

Sensitive to the impact (of pot hitting water) the moss moves away

Like my love sickness which

Goes away with each touch of my lover

And spreads each time he lets go of me!

Poet: Paranar

Translated by Palaniappan Vairam Sarathy

ஊர் கேணியில் உள்ளப் பாசிப்
படித்துறையில் இருந்து
நீர் இறைக்கும் பொழுது
விலகுவதுப் போல்
என் காதல் நோய்
அவன் தொடுத் தொட நீங்கி
விட விட படர்கிறது!

———–

Reference:

Tamil Lexicon – University of Madras

Kurunthokai – Shanmugam Pillai and David Ludden

————

ஊர் உண் கேணி உண்துறைத் தொக்

Village –drink/draw – tank/well –

பாசி அற்றே பசலை-காதலர்

Moss – without – paleness/love sickness – lover

தொடுவுழித் தொடுவுழி நீங்கி,

Touch – while – touch – while – remove/go away

விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.

Let go- while – let go- while – spreads

உரை

பசலை – பசலையானது, காதலர் – தலைவர், தொடுவுழி தொடுவுழி – நம்மைத் தீண்டுந்தோறும், நீங்கி – நம் உடலை விட்டு அகன்று, விடுவுழி விடுவுழி – பிரியுந்தோறும், பரத்தலான் – பரவுதலால், ஊர் உண் கேணிஉண்துறை தொக்க – ஊரினரால் உண்ணப்படும் நீரையுடையகிணற்றின் உண்ணுந் துறையினிடத்தே கூடிய, பாசி அற்று – பாசியைப் போன்றது.

7 Comments

  1. thanks for your excellent blog and these uplifting posts! keep up the good work!

  2. தொடுவுழித் தொடுவுழி நீங்கி,
    விடுவுழி விடுவுழிப் பரத்தலானே!
    This single sentence itself is enough to write an intimate novel!!

  3. அழகான உவமை. தொட்டவுடன் விலகி, தலைவன் அகன்றவுடன் கூடிய பாசி!!! பசலைக்கு சரியான உவமை!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.