Raise women save your husbands! – Narrinai 170


#MEMEthokai27

Situation: Thalaivi (Heroine) goes to festival grounds with Thalaivan (hero), there she sees a lonely beautiful women who is there to charm the married males of the town. Thalaivi sounds a warning to all assembled women to save their husbands.

நற்றிணை 170, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, மருதத் திணை – தோழி ஆயத்தாரிடம் சொன்னது
மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,
வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,
பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்
விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;
எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம் 5
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப்,
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது
ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்
பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

naṟṟiṇai 170, pāṭiyavar peyar kiṭaikkavillai, marutat tiṇai – tōḻi āyattāriṭam coṉṉatu
maṭakkaṇ, takarak kūntal, paṇaittōḷ,
vārnta vāl eyiṟṟu, cērntu ceṟi kuṟaṅkiṉ,
piṇaiyal am taḻai taii, tuṇaiyilaḷ
viḻavuk kaḷam poliya vantu niṉṟaṉaḷē;
eḻumiṉō eḻumiṉ, em koḻunaṟ kākkam 5
āriyar tuvaṉṟiya pēr icai muḷḷūrp,
palar uṭaṉ kaḻitta oḷ vāḷ malaiyaṉatu
oru vēṟku ōṭiyāṅku, nam
paṉmaiyatu evaṉō, ivaḷ vaṉmai talaippaṭiṉē?

நற்றிணை 170, பாடியவர் பெயர் கிடைக்கவில்லை, மருதத் திணை – தோழி ஆயத்தாரிடம் சொன்னது
வெகுளியாய் தோற்றமளிக்கும் கண்களையும், நறுமணச் சாந்து பூசிய கூந்தலையும், மூங்கில் போல் தோள்களையும்
வரிசையான வெண் பற்களையும், திரண்ட இறுக்கமான தொடைகளையும் உடைய
பிணைத்த அழகிய இழைகளால் தைக்கப்பட்ட உடையை உடுத்தி, துணையின்றி தனியாக வந்திருக்கும் இவள்
விழாக் களத்தில் பொலிவுடன் வந்து நின்றனளே;
எழுக, எழுக, உங்கள் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!
ஆரியர்கள் கூட்டமாக பெரும் புகழ் கொண்ட முள்ளூர்ப் போர்க்களத்தில்
பலருடன் உரை நீக்கிய ஒளிபொருந்திய வாளுடன் வந்தாலும், மலையனது
ஒரு வேல் ஓட செய்தது போல, நாம்
பலர் இருப்பது என்ன பயன், இவள் தன் ஆற்றலை வெளிப்படுத்தினால்?

Natrinai 170, Unknown Poet, Marutham Thinai – What the heroine’s friend said to her friends
She with her
Innocent eyes,
hair with fragrance of Tharakam,
Bamboo like arms,
Upright white teeth,
round and tight thighs,
Beautifully combined leaf garment,
stands with bloom,
on the festival grounds
without any companion!
Raise women, Raise!
Protect your husband!
We are many, yet we would look like,
Aryan army heaped at Mullur of great fame,
Which had many men with shining sword,
yet were defeated by
the single lance of Malaiyan!
If she succeeds with her skills!

Translated by Palaniappan Vairam Sarathy

Notes:

Malaiyanman was famous line of kings during Sangam age and had prominence even in Chola Age.

Raja Raja Cholan’s mother comes from Malaiyanman line.

Their capital was Thirukkovilur. The Aryan kings mentioned here could be the Guptas.

தகரம் takaram – Frangrance made from Wax Flower

தகரம்¹ takaram , n. < tagara. 1. Wax-flower dog-bane, Tabernae montana; வாசனை மரவகை. திருந்து தகரச் செந்நெருப்பில் (சீவக. 349). 2. Aromatic unguent for the hair; மயிர்ச் சாந்து. தண்ணறுந் தகரங் கமழ மண்ணி (குறிஞ்சிப். 108). 3. Fragrance; வாசனை. (அக. நி.) 

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

மடக்கண், தகரக் கூந்தல், பணைத்தோள்,

maṭakkaṇ, takarak kūntal, paṇaittōḷ,

வெகுளியாய் தோற்றமளிக்கும் கண்களையும், நறுமணச் சாந்து பூசிய கூந்தலையும்,  மூங்கில் போல் தோள்களையும்

Innocent – eyes – fragrance of Tabernae montana – hair, bamboo- arms

வார்ந்த வால் எயிற்று, சேர்ந்து செறி குறங்கின்,

vārnta vāl eyiṟṟu, cērntu ceṟi kuṟaṅkiṉ,

வரிசையான வெண் பற்களையும், திரண்ட இறுக்கமான தொடைகளையும் உடைய

In order/Upright – white – teeth – full/round/plump – tight – thigh

பிணையல் அம் தழை தைஇ, துணையிலள்

piṇaiyal am taḻai taii, tuṇaiyilaḷ

பிணைத்த அழகிய இழைகளால் தைக்கப்பட்ட உடையை 

Join – beautiful – leaves/wreaths – adorn – company without

விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே;

viḻavuk kaḷam poliya vantu niṉṟaṉaḷē;

உடுத்தி, துணையின்றி தனியாக வந்திருக்கும் இவள்

விழாக் களத்தில் பொலிவுடன் வந்து நின்றனளே;

Festival – ground – flourish/bloom – come – she stands

எழுமினோ எழுமின், எம் கொழுநற் காக்கம்  

eḻumiṉō eḻumiṉ, em koḻunaṟ kākkam  5

எழுக, எழுக, உங்கள் கணவனைக் காத்துக்கொள்ளுங்கள்!

Raise – raise all of you – our – husband – save/protect

ஆரியர் துவன்றிபேர் இசை முள்ளூர்ப்,

āriyar tuvaṉṟiya pēr icai muḷḷūrp,

ஆரியர்கள் கூட்டமாக பெரும் புகழ் கொண்ட முள்ளூர்ப் போர்க்களத்தில்

Aryan – heaped/fill up – great/large – fame –  Mullur (of Malayanman)

பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது

palar uṭaṉ kaḻitta oḷ vāḷ malaiyaṉatu

பலருடன் உரை நீக்கிய ஒளிபொருந்திய வாளுடன் வந்தாலும், மலையனது

Many – with – repel/pass – bright – sword – Malaiyanman

ஒரு வேற்கு ஓடியாங்கு, நம்

oru vēṟku ōṭiyāṅku, nam

ஒரு வேல் ஓட செய்தது போல, நாம்

One – Seperate – run/defeat – us

பன்மையது எவனோ, இவள் வன்மை தலைப்படினே?

paṉmaiyatu evaṉō, ivaḷ vaṉmai talaippaṭiṉē?

பலர் இருப்பது என்ன பயன், இவள் தன் ஆற்றலை வெளிப்படுத்தினால்?

multiple/many – what manner/how , her – force/skill – became superior

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.