#MEMEthokai54
One of the most imaginative visual imagery, only those guys could pack so much in 3 lines!
Situation: Thalaivan ( Hero) is in love with Thalaivi (Heroine). He has separated from Thalaivi to earn money for their marriage (Bridegroom had to pay dowry those days!). Thalaivi is sad and Thozhi (friend) consoles her! #MEMEthokai #karkanirka
ஐங்குறுநூறு 432, பேயனார் – முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
நன்றே காதலர் சென்ற ஆறே,
சுடு பொன் அன்ன கொன்றை சூடிக்
கடி புகுவனர் போல், மள்ளரும் உடைத்தே.
aiṅkuṟunūṟu 432, pēyaṉār – mullait tiṇai – tōḻi talaiviyiṭam coṉṉatu
naṉṟē kātalar ceṉṟa āṟē,
cuṭu poṉ aṉṉa koṉṟai cūṭik
kaṭi pukuvaṉar pōl, maḷḷarum uṭaittē.


ஐங்குறுநூறு 432, பேயனார் – முல்லைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
சுடுகின்ற பொன்னைப் போல் தோன்றும் கொன்றை மலர்களை சூடி
திருமண வீட்டில் நுழைபவரைப் போல் நுழைவர் போர்வீரர்கள்,
உன் காதலர் சென்ற நல்ல பாதையில்!


Ainkurunūru 432, Pēyanār, Mullai Thinai – What the heroine’s friend said to her
The warriors who enter the forest path
your lover went,
look like the women
who entered the wedding
Adorning the konrai flowers
Which has shades of burning gold!
Translated by Palaniappan Vairam Sarathy
Notes:
கொன்றை – koṉṟai

Forest referred here could be defensive or protective forest around the fort or frotified town to make it difficult for any invasion.
—-
Reference:
Tamil Lexicon – University of Madras
Learn Sangam Tamil
Tamilconcordance.in
—
நன்றே காதலர் சென்ற ஆறே,
naṉṟē kātalar ceṉṟa āṟē,
நன்றே உன் காதலர் சென்ற பாதை!
Good – lover – went – path
cuṭu poṉ aṉṉa koṉṟai cūṭik
சுடுகின்ற பொன்னைப் போல் தோன்றும் கொன்றை மலர்களை சூடி
Burning – gold – alike – cassia fistula – wear
கடி புகுவனர் போல், மள்ளரும் உடைத்தே.
kaṭi pukuvaṉar pōl, maḷḷarum uṭaittē
திருமண வீட்டில் நுழைபவரைப் போல் நுழைவர் போர்வீரர்கள்,
Wedding – enter – alike – warrior – breach/enter