167
நீயே, அமர் காணின் அமர் கடந்து, அவர்
படை விலக்கி எதிர் நிற்றலின்,
வாஅள் வாய்த்த வடு ஆழ் யாக்கையொடு,
கேள்விக்கு இனியை; கட்கு இன்னாயே:
அவரே, நிற் காணின் புறம் கொடுத்தலின்,
ஊறு அறியா மெய் யாக்கையொடு,
கண்ணுக்கு இனியர்; செவிக்கு இன்னாரே:
அதனால், நீயும் ஒன்று இனியை; அவரும் ஒன்று இனியர்;
ஒவ்வா யா உள, மற்றே? வெல் போர்க்
கழல் புனை திருந்து அடிக் கடு மான் கிள்ளி!
நின்னை வியக்கும் இவ் உலகம்; அஃது
என்னோ? பெரும! உரைத்திசின் எமக்கே.
திணை அது; துறை அரச வாகை.
ஏனாதி திருக்கிள்ளியைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
……
…
You go to war
and win
by routing your enemy’s armies.
Your body is full of scars
from the wounds
caused by swords of the enemies,
hence you have
a good fame,
but you are
ugly to look at.
Your enemies
when they see you
in the battle field
turn their back and
escape unhurt,
hence they are
good to look at
but have a
ugly fame.
So you have
a good attribute
and they also have
one good attribute.
Then what is the difference between
your enemies and
you, Killi
the master of swift horse
and the one who wears an anklet
and always victorious in war ?
Why the world
always honors only you?
Tell me my lord.
Konnatu Ericciulur Matalan Mathurai Kumaranar sings Enati Thirukilli
My own Translation.
…….
…..
Tamil Urai : U.V.Swaminathan Iyer
நீதான, போரைக்காணின் அப்போரை வென்று அப் பகைவரது படையை விலக்கிஎதிர்நிற்றலான் வாள்வாய்க்கத் தைத்தவடு அமுந்தியஉடம்புடனே கேட்ட செவிக்கு இனியை, கண்ணுக்கு இன்னாய்;பகைவராகிய அவர்தாம், நின்னைக் காணிற்புறந்தருதலாற் புண்ணறியாத உடம்பாகிய வடிவுடனே கண்ணுக்குஇனியர், செவிக்கு இனியரல்லர்; அதனால், இங்ஙனம்நீயும் ஒன்றினியை; அவரும் ஒன்றினியர்; இனி அவரொவ்வாதனவேறு யாவை யுள; வெல்லும் போரினைச் செய்யும் வீரக்கழலணிந்த திருந்திய அடியினையும் கடிய செலவினையுடையகுதிரையையுமுடைய கிள்ளி ! நின்னை மதித்திருக்கும்இவ்வுலகம்; அதற்குக் காரணம் யாதோ? பெருமானே! எமக்குச்சொல்லுவாய்
…….
….
Please post your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1