2851.
‘தொடை அமை நெடு மழைத்
தொங்கல் ஆம் எனக்
கடை குழன்று இடை நெறி
கரிய குஞ்சியைச்
சடை எனப் புனைந்திலன்
என்னில், தையலார்
உடை உயிர் யாவையும்
உடையுமால்’ என்றாள்.
Ah!if instead of matted hair.he was wearing
the black tuft of a young man with its curls
all through it like long clouds hanging down,
surely he would put an end to every women’s life.
2852.
‘நாறிய நகை அணி
நல்ல புல்லினால்
ஏறிய செவ்வியின்
இயற்றுமோ? ‘எனா,
‘மாறு அகல் முழு மணிக்கு
அரசின் மாட்சிதான்
வேறு ஒரு மணியினால்
விளங்குமோ? ‘என்பாள்.
If the best of ornaments,radiating light,were to embrace
this body,could they make its loveliness grow any more?
Does the beauty of the faultless ruby,king of gems,
shine any brighter by the presence of some other jewel?
2853.
‘கரந்திலன் இலக்கணம்
எடுத்துக் காட்டிய
பரம்தரு நான் முகன்
பழிப்பு உற்றான் அரோ!
இரந்து இவன் இணை அடிப்
பொடியும் ஏற்கலாப்
புரந்தரன் உலகு எலாம்
புரக்கின்றான் ‘என்பாள்.
When Brahma created this body,collecting and displaying
every virtue possible,keeping nothing back,then blame
came to him since Indra,ruler of all worlds, though he beg
for more,in beauty is not worth the dust on those feet!
2854.
நீத்தமும் பரவையும் குறுக நெஞ்சிடைக்
கோத்த அன்பு உணர்விடைக் குளிப்ப மீக்கொள
ஏத்தவும் பரிவின் ஒன்று ஈகலான் பொருள்
காத்தவன் புகழ் எனத் தேயும் கற்பினாள்.
As the love in her heart swelled higher than a flooding river
or even a the ocean, as her wisdom disappeared, her purity
waned like the fame of a man who hoards up wealth
and gives nothing with love as reward for a praise!
2855.
வான் தனில் வரைந்தது ஓர்
மாதர் ஓவியம்
போன்றனள், நின்றனள்,
புழுங்கும் நெஞ்சினள்,
தோன்றல்தன் சுடர் மணித்
தோளில் நாட்டங்கள்
ஊன்றினள், பறிக்க ஓர்
ஊற்றம் பெற்றிலள்.
Like a picture of a woman sketched against the sky,she stood there
with her heart on fire, her sight fastened to the shining
handsome shoulders of the hero and she could not manage
the strength to pull her eyes free from that vision.
இராமன்மேல் காதல் கொள்ளல்
2856.
நின்றனள், ”இருந்தவன்
நெடிய மார்பகம்
ஒன்றுவென்; அன்று எனின்,
அமுதம் உண்கினும்
பொன்றுவென்; போக்கு இனி
அரிது போன்ம் ” எனாச்
சென்று, எதிர் நிற்பது ஓர்
செய்கை தேடுவாள்.
So she stood. And she thought.” I will make love with this man
or else I will die,even if I were to swallow the drink that
gives immortality. I feel that now nothing else is possible.”
She moved closer and tried to think of some means to approach him.
Poet: Kamban
Translated by George L. Hart, Hank Heifetz
Women is a women whether a Human or Demon! Person who just reads these verses alone would never believe Surpanaka must have been a demon. Still if a person reads Kamban’s description of Surpanaka’s beauty which even shook Rama, you would never ever believe she must have been a Demon. I would be soon posting Kamban’s description of Surpanaka , which is supposed be one of the best works of Kamban in his Ramavtharam.
……………………………………….
Related Links
Surpanka describing Rama Part 1
Surpanka describing Rama Part 2
…………………………………………
Please post your comments.
Here is the link for my orkut community for this blog http://www.orkut.com/Community.aspx?cmm=49797549&refresh=1