Husband getting hit by drunk wife – Paripatal 7


#MEMEthokai20

This is a hilarious poem, completely came in as surprise when I first read it. This is an excerpt from a Paripatal poem

Situation: People of Madurai, see fresh flood waters in Vaigai and decided to play, spend time in Vaigai. Here a couple encounter a funny situation (for us and tragic for the couple involved) in the shores of Vaigai.

 7 வையை - பாடியவர் : மையோடக் கோவனார்
பண் அமைத்தவர் : பித்தாமத்தர் பண் : பண்ணுப்பாலையாழ்

விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண்;
கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினைப் 65

பாண் ஆதரித்துப் பல பாட, அப் பாட்டுப்
பேணாது ஒருத்தி பேதுற, ஆயிடை
என்னை வருவது எனக்கு என்று இனையா,
நன் ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணி,
சிகை கிடந்த ஊடலின் செங்கண் சேப்பு ஊர, 70

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்
பகை தொடர்ந்து கோதை பரியூஉ, நனி வெகுண்டு,
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்
சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்ப, சிரம் மிதித்து,
தீர்வு இலதாகச் செருவுற்றாள், செம் புனல். 75
ஊர் உடன் ஆடும் கடை

virumpiya īraṇi mey īram tīra,
curumpu ārkkum cūr naṟā ēntiṉāḷ kaṇ neytal;
pēr makiḻ ceyyum peru naṟāp pēṇiyavē
kūr naṟā ārntavaḷ kaṇ;
kaṇ iyal kaṇṭu ētti kārikai nīr nōkkiṉaip 65

pāṇ ātarittup pala pāṭa, ap pāṭṭup
pēṇātu orutti pētuṟa, āyiṭai
eṉṉai varuvatu eṉakku eṉṟu iṉaiyā,
naṉ ñemar mārpaṉ naṭukkuṟa naṇṇi,
cikai kiṭanta ūṭaliṉ ceṅkaṇ cēppu ūra, 70

vakai toṭarnta āṭaluḷ nallavar tammuḷ
pakai toṭarntu kōtai pariyūu, naṉi vekuṇṭu,
yāṟu āṭu mēṉi aṇi kaṇṭa taṉ aṉpaṉ
cēṟu āṭu mēṉi tirunilattu uyppa, ciram mitittu,
tīrvu ilatākac ceruvuṟṟāḷ, cem puṉal. 75
ūr uṭaṉ āṭum kaṭai

7. Vaiyai – Poet: Maiyōdakōvanār, Composer: Pithāmathar, Melody: Pālai Yāl
(lines 60-76)

To end the chill
Caused by the wet swimwear she adorned with desire,
She drank the fierce fragrant wine,
causing her eyes like (white) water lilies,
get intoxicated and appear like
the big (red) naravam flower!
Seeing her beautiful eyes on the clear waters,
A husband/lover sang singing her praise,
without understanding the intention, another girl
got seduced at that place.
The husband/lover with wide chest
sensed the situation
And wondered
‘what is coming to torment me now?”
He tremblingly approached his wife/lover,
who was sulking with fuming red eyes, seeing the girl
among groups of people continued to play in the river,
She continued her enmity with him
And exhibited her rage by shredding her garland
He admired her jewel like body bathing in the river
And prostrated his sandal paste smeared body before her !
She kicked his head in rage,
there was no solution to their quarrel,
at the red sand banks of river,
Where people played in this town!

Notes:

  • Paripatal is dated around 500 – 700 AD, atleast 200 years after original Sangam poems.
  • It is widely believed that Paripatal poems are not Sangam poems, but since they follow the traditions of Sangam poems and traditionally classified as Sangam poems, it is generally called as Late Snagam poems in academic circles.
  • Social situation in Paripatal is much different than in Sangam literature. Sangam poems are not religious in nature while Paripatal is dedicated to poems on Murugan, Perumal and Vaigai.
  • Poems here tend to be more erotic than Sangam poems which allude to themes with erotic nature and never directly erotic.
  • In Kalithokai and Paripatal, we see cosmopolitan nature displayed than Sangam literature which are set mostly in towns and villages.
  • Nara – means liquor as well as Naravam flower, poet has used both usage in the poem

7 வையை – பாடியவர் : மையோடக் கோவனார் பண் அமைத்தவர் : பித்தாமத்தர் பண் : பண்ணுப்பாலையாழ் (60-76)

செம்மையான நீரில் ஊர் மக்களுடன் நீர் ஆடிய இடத்தில்,
நீச்சலாடை உடுத்திய உடலின் ஈரம் தீர,
வண்டுகள் மொய்க்கும் கொடுங் கள்ளை குடித்ததனால்,
நெய்தல் போன்ற வெள்ளை கண்களையுடையவள்;
பெரு மகிழ்ச்சியைத் தரும் பெரிய நறவ மலரின் சிவப்பு நிறத்தைப் பெற்றால்
சிவந்த அழகிய கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவியின் அழகிய பார்வையை பாராட்டி,
பாடல் பாட விரும்பி, பல பாடல்களைப் தலைவன் பாட

அந்தப் பாடல்களைப் யாருக்காகப் பாடப்படுவது என்று புரியாமல் அங்கிருந்த ஒருத்தி மயங்கிப்போக, அப்பொழுது என்ன துன்பம் வருமோ எனக்கு என்று வருந்தி
நன்கு பரந்த மார்பினையுடைய தலைவன், நடுங்கிப்போய் தலைவியின் அருகே செல்ல,
முன்னிறுத்த ஊடலின் மீதியால் சிவந்த கண்கள் மேலும் சிவப்பாக

முறையோடு தொடர்ந்த நீரில் விளையாடியப் பலருள்ளே இருந்த ஒருத்தியோடு
பகை தொடர்ந்த, தன் பூமாலையை அறுத்தெறிந்து, மிகுதியானக் கோபத்துடன்
ஆற்றில் விளையாடும் தலைவியின் மேனி அழகைக் கண்ட தலைவன்
சந்தனம் பூசிய தன் மேனி அழகிய நிலத்தில் படும்வண்ணம் அவளை வணங்க, அவனுடைய தலையை மிதித்து
தீராமல் தொடரும் ஊடல் கொண்ட தலைவி, செம்மையான வைகைநதியில்
ஊர் உடன் நீர் ஆடிய இடத்தில்

—-

Reference:

Tamil Lexicon – University of Madras

Learn Sangam Tamil

Tamilconcordance.in

——–

விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர,

virumpiya īraṇi mey īram tīra,

விருப்பத்துக்குரிய நீச்சலாடைஉடுத்திய உடலின் ஈரம் ஈரம் தீர,

Desire – wet – cloth (swimsuit)- body/adorn – wet – remove

சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல்;

curumpu ārkkum cūr naṟā ēntiṉāḷ kaṇ neytal; 

வண்டுகள் மொய்க்கும் கொடுங் கள்ளை ஏந்தினாள், நெய்தல் போன்ற கண்களையுடையவள்;

bee  – swarm – strong/fierce – fragrant wine – held – eyes – waterlily

பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே

pēr makiḻ ceyyum peru naṟāp pēṇiyavē 

பெரு மகிழ்ச்சியைத் தரும் பெரிய நறவ மலரின் சிவப்பு நிறத்தைப் பெற்ற,

Big  – joy /intoxication – big – Naravam flower – foster/nurture/protect

கூர் நறா ஆர்ந்தவள் கண்.

kūr naṟā ārntavaḷ kaṇ. 

கூர்மையான கள் குடித்தவளின் கண் 

Sharp – fragrant wine – drink – eyes

கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினைப் 65

kaṇ iyal kaṇṭu ētti kārikai nīr nōkkiṉaip 65 

கண்களின் இயல்பினைக் கண்டு, தலைவியின் அழகிய பார்வையை பாராட்டி, 

Eyes – beauty – see – praise – beautiful/women  – liquid/water – watch/see

பாண் ஆதரித்துப் பல பாட, அப் பாட்டுப்

pāṇ ātarittup pala pāṭa, ap pāṭṭup 

பாடல் பாட விரும்பி, பல பாடல்களைப் பாட, அந்தப் பாடல்களைப்

song – wish/patronize – many -sing – that – song

பேணாது ஒருத்தி பேதுற, ஆயிடை

pēṇātu orutti pētuṟa, āyiṭai 

யாருக்காகப் பாடப்படுவது என்று புரியாமல் அங்கிருந்த ஒருத்தி மயங்கிப்போக, அப்பொழுது

Not nurture – one girl – bewildered – that place

என்னை வருவது எனக்கு என்று இனையா,

eṉṉai varuvatu eṉakku eṉṟu iṉaiyā, 

என்ன துன்பம் வருமோ எனக்கு என்று வருந்தி

What – coming –  for me – so – torment/agony

நன் ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணி,

naṉ ñemar mārpaṉ naṭukkuṟa naṇṇi, 

நன்கு பரந்த மார்பினையுடைய தலைவன், நடுங்கிப்போய் தலைவியின் அருகே செல்ல,

Good – spread/extend – chest man – tremble – approach

சிகை கிடந்த ஊடலின் செங்கண் சேப்பு ஊர, 70

cikai kiṭanta ūṭaliṉ ceṅkaṇ cēppu ūra, 70 

முன்னிறுத்த ஊடலின் மீதியால் சிவந்த கண்கள் மேலும் சிவப்பாக

Left over  – left  – sulking – red eye – ? – spread/crawl

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள்

vakai toṭarnta āṭaluḷ nallavar tammuḷ 

முறையோடு தொடர்ந்த நீரில் விளையாடியப் பலருள்ளே இருந்த ஒருத்தியோடு

class/division – continue – with dance – among dance – good one/friends – within them

பகை தொடர்ந்து  கோதை பரியூஉ, நனி வெகுண்டு,

pakai toṭarntu  kōtai pariyūu, naṉi vekuṇṭu, 

பகை தொடர்ந்த, தன் பூமாலையை அறுத்தெறிந்து, மிகுதியானக் கோபத்துடன்

Enmity – continue – garland – grab/break  – abundant – with rage

யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன்

yāṟu āṭu mēṉi aṇi kaṇṭa taṉ aṉpaṉ 

ஆற்றில் விளையாடும் தலைவியின் மேனி அழகைக் கண்ட தலைவன்

River – bath – body – ornament/beauty – see – her – lover/friend

சேறு ஆடு மேனி திருநிலத்து உய்ப்பசிரம் மிதித்து,

cēṟu āṭu mēṉi tirunilattu uyppa,  ciram mitittu, 

சந்தனம் பூசிய தன் மேனி அழகிய நிலத்தில் படும்வண்ணம் அவளை வணங்க, அவனுடைய தலையை மிதித்து

Sandal paste – bath – body – beautiful land – discharge/survive – head – kick

தீர்வு இலதாகச் செருவுற்றாள், செம் புனல். 75

tīrvu ilatākac ceruvuṟṟāḷ, cem puṉal. 75 

தீராமல் தொடரும் ஊடல் கொண்ட தலைவி, செம்மையான நீரில்

ending/solution – less – battle/love quarrel – red – sand

ஊருடன் ஆடுங்கடை

ūruṭaṉ āṭuṅkaṭai 

ஊர் மக்களுடன் நீர் ஆடிய இடத்தில்;

Town – playing place

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.